மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இதுவரை நீங்கள் செய்து வந்த தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் லாபம் காண கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் அனுகூலமான நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மனசுக்குகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமையில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் காண முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்வீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருப்பதால் நீங்கள் எதை எடுத்தாலும் அதில் வெற்றி காணக்கூடிய வாய்ப்பு உண்டு. கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்லுதல் நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மற்றவருடைய சுயரூபம் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். திறமைக்கு வாய்ப்புகள் கிட்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிலும் முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன வீதியான வீண் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும் கவனம் வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் யோகம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழில் உள்ளவர்களுக்கு நீங்கள் தொட்ட காரியங்கள் வெற்றி நடை போடும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தடை இல்லாமல் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமக்க வேண்டிய வாய்ப்பு உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைபட்ட காரியங்களை கூட உங்கள் முயற்சியால் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ பேச்சில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் முற்போக்கு சிந்தனை காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கை ஏற்படலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இடை வழிபாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான ஒரு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் எதிர்பாராத நபர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் நிம்மதி அப்படியே இருக்க உங்கள் ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். தேவையற்ற அலட்சியங்கள் வேண்டாம். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமையில் விரிசல் வரலாம் எனவே கவனமாக இருப்பது நல்லது. சுய தொழில் நீங்கள் எதிர்பாராத லாபத்தை காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய சிந்தனை உதிக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல அமைப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்தது அப்படியே நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளின் தொல்லையை சமாளிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.