மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் பல நடக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். இழந்த ஒன்றை திரும்பப் பெரும் யோகம் உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமைகளை சரிவர செய்வது நல்லது. குடும்பத்தில் குதூகலத்திற்கு குறைவிருக்காது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சிந்தனைகள் உதிக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் வேண்டுதல்கள் பலிக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற இடங்களில் அமைதி காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை குறுக்கு வழியில் செல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் நாணயத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சோர்வுடன் காணப்படலாம் கவனம் வேண்டும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சிறு தொழிலில் உள்ளவர்கள் எதிர்வரும் பிரச்சனைகளை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும் நல்ல நாளாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் புத்துணர்வு தெரியக்கூடிய பொலிவான அமைப்புடன் இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்கள் அதிகரிக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பாராட்டுக்கள் பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சுப காரியங்களில் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய தன்னம்பிக்கை வளரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் தருணமாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.