மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் தீர கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற விவாதங்கள் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மந்தமான சூழ்நிலை காணப்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இனிய பலன்கள் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசர முடிவுகள் ஆபத்தை கொடுக்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருக்கும் முக்கிய விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தைரியம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவியிடையே இருக்கும் வாக்குவாதங்களை ஆரோக்கியமாக மேற்கொள்ள முயற்சி செய்வது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்து அளவிற்கு சலுகைகள் கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக வெற்றி பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கப் போகிறது. சுபகாரி முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்கள் வெளிவட்டால் தொடர்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளால் சில தொந்தரவுகளை சந்திக்கலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து எதிர்பாராத நல்ல செய்திகளை பெற இருக்கிறீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பொன், பொருள் சேரும் யோகம் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைப்பதற்கு வாய்ப்புகள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமயோசித புத்தி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதுரியமான முடிவுகள் லாபத்தை கொடுக்கும் வகையில் அமையும். புதிய முயற்சிகளில் அணுகூல பலன் கிட்டும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தைரியமான முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய யுத்திகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் அலட்சியம் வேண்டாம்.