மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் அதிர்ஷ்டம் வர வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுடைய தரப்பில் நாணயமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் நீடித்து வந்த சிக்கல்கள் தீரும். போக்குவரத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எண்ணியது எண்ணியபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம் எனவே விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ளுதல் நலம் தரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த பணக்கசப்புகள் தீரும். புதிய பொருள் சேரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை எப்படியேனும் அடைய போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அலட்சியம் பேர இழப்பை ஏற்படுத்தலாம் எனவே கவனம் தேவை. பொருளாதார சிக்கல் தீரும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனைகள் எதிர்மறையாக சிந்திக்க வாய்ப்புகள் உண்டு எனவே நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரித்து காணப்படும் இதனால் டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல தடைகளை தாண்டிய முன்னேற்றம் நிச்சயம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் முன் கோபம் தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்தால் சேமிக்கலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. சற்றும் யோசிக்காமல் சிறந்த விஷயங்களை செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரவு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிரிகளின் பலம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கை உணர்வு தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் போராட்டங்கள் நல்ல முடிவுகளை எட்டும். விட்டு சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதில் இருந்து வந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் இதுவரை சந்தித்த பெரிய போராட்டங்களுக்கு முடிவு காணலாம். எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரக்தி ஏற்படலாம், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிகம் பொறுமையுடன் இருப்பது நல்லது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை மனதில் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடங்களில் பயணம் செய்யும் பொழுது வம்பு, வழக்குகள் வந்து சேரும் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பப் பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதையும் பெரிதாக சிந்திக்கும் எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய பலமே பலவீனமாக மாறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருளை வாங்க வாய்ப்பு உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்து இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பயணத்தின் பொழுது கவனம் தேவை.