மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு அனுகூலம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தொடர் முன்னேற்றம் இருக்கும் என்பதால் விடாமுயற்சியை தளர்த்திக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மை மிகவும் முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய கவனம் கூடுதலாக தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய மனதில் பல்வேறு விதமான குழப்பங்கள் நிலவக்கூடும். குழப்பத்தில் எந்த ஒரு முடிவையும் எடுப்பது சரியல்ல. சுய தொழிலில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பல எதிர்ப்புகள் அடங்கும் நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் துணிச்சலுடன் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமுதாய அக்கறை குறித்த நலம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமையை அங்கீகரிக்க வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிலுவையில் இருக்கும் வேலைகள் முடிவடையும். சுபகாரிய தடைகள் விலகி நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் அவசரம் இருக்கும் அதனை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கை ஓங்கி இருக்கக் கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சுய தொழிலில் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பலவீனத்தை தெரிந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அமையும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப பொறுப்புகளில் அக்கறை தேவை. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களில் பொழுது தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய இரக்க சுபாவம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தலாம் கவனம் தேவை.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏமாற்றம் நிறைந்த நாளாக அமைய வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான பலனை பெற இருக்கிறீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையப் போகிறது. கணவன் மனைவி புல் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சுய தொழிலில் இதுவரை நீங்கள் காணாத லாபத்தை காண போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய வெற்றி கிடைக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கூடுமானவரை முன்கூட்டியே திட்டமிட்டு எந்த ஒரு செயலையும் செய்வது உத்தமம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் எனவே அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியம் முன்னேற்றம் காணும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகிறது. சுயதொழில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் பெருகும். பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலருக்கு தொலைதூர வெளியிட பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இறை சிந்தனை அதிகரித்து காணப்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உங்களுடைய வேலையை காட்டிலும், மற்றவர்களின் மீது கண்காணிப்பு அதிகமாக இருப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவலை சிதறல் ஏற்படலாம் விழிப்புணர்வு தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. உங்களுடைய முன்பு தேவையற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.