உக்ரைனில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷ்யாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைனுக்கு செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், பல்லாயிரக் கணக்கான பொது மக்களை கொலை செய்து அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.