யாழில், இராணுவத்தினரை காணொளி படம் பிடித்த மூவர் பருத்தித்துறைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வீதி ரோந்தில் ஈடுபட்ட இராணுவத்திரை திட்டுவது போன்று ஒருவர் பாசாங்கு செய்ய, அதனை இரு நண்பர்கள் அதனை படமாக்கியதாக இராணுவத்தினர் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில், மூன்று இளைஞர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தற்போது தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
எனினும் குறித்த இளைஞர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்களா என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை