பிச்சை எடுப்பதற்கு சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் சிறுவர் பிச்சையெடுக்கும் சம்பவங்கள் வழமையாக பதிவாகி வருவதாகத் தெரிவித்த அவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பிச்சை எடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்