சாரதி பயிற்றுனர்கள் மற்றும் உதவி ஓட்டுநர் பயிற்றுனர்களை பதிவு செய்வதற்கான எழுத்துப் பரீட்சை 2022 ஜூன் மாதம் கொழும்பில் நடைபெற உள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான அறிவிப்பு 28.01.2022 திகதியிட்ட 2265 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15.03.2022 க்கு முன்னர் இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.