விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகாரனின் இளைமைக்காலம் தொடர்பான நிழச்சிகளை விவரிக்கும் படமாக எடுக்கப்பட்டது தான் மேதகு திரைப்படம். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பலதரப்புகளின் வரவேற்பை பெற்றது.
தீவிரவாதக் குழுக்களை பற்றியும், போர்களைப் பற்றியும், போராளிகளைப் பற்றியுமான படங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்துள்ளன. உலகமெங்கும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்கள் அதற்கான முயற்சியில் எப்போதுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கூட இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது, அப்படி பெரும் முயற்சி ஒன்றில் வெளிவந்திருக்கும் படமே ‘மேதகு’.
எந்தப்புள்ளியில் பிரபாகரன் ஆயுதம் ஏந்தும் முடிவை எடுத்தார் என்கிற கேள்விக்கான பதிலாக, அதன் வேரைத்தேடி செல்லும் பயணமே இந்தப் படம். இதற்கு முன் யாரும் பதிவு செய்யாத ஒரு விஷயம் இது என்பதே இந்தப் படத்தின் முதல் சிறப்பம்சம்.
பிரபாகரனின் வாழ்க்கையை சித்தரிப்பதாக கூறும் “மேதகு” திரைப்படத்தை ஒளிபரப்ப கம்போடிய தொலைக்காட்சி நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளது