முள்ளிவாய்கால் மேற்கு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்கள் சில புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த ஆவணங்கள் நந்திக்கடல் களப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றய தினம் பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமை படையினர் அவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது , தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய ஆவணங்களே மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனுள் அடையாள அட்டைகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.