முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளுக்கு தகாத முறையில் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஆசிரியருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் தூஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார் கைதான ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட து. இதன்போது சந்தேகந்பரான் ஆசிரியர் ஜந்து இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும், 25000 காசு பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் , ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் 9 தொடக்கம் 12 மணிக்குள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடுமாறும், சாட்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது என்றும், கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த வழக்கு விசாரணைகள் 05.04.2022 ம் திகதிக்கு நீதிமன்றினால் தவணையிடப்பட்டுள்ளது.