நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக , எரிபொருள் கொள்வனவுக்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் தலைவர் நலிந்த இளங்கோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரீட்சை இடம்பெற்ற மதியம் எந்தவொரு பிரதேசத்திலும் மின்சாரத்தை துண்டிக்கவில்லை எனவும் அவர் கூறினார். , ஏதேனும் ஒரு பிரதேசத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அது வேறு ஏதேனும் தவறு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இரவு வேளைகளில் தொடர்ந்து மின்சாரம் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்