மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் மின்கட்டணத்தை பாரியளவில் அதிகரிப்பது மிகவும் அநியாயம் என்றார்.
இதன்படி மக்களை மின்சார கதிரைக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்