இன்று (11) முதல் லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி இன்றும் (11) நாளையும் (12) கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை கூடிய பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்கப்படும்.
அதேசமயம் 13 ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும். இதேவேளை, சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு, மே மாதத்துக்கான மின்சார பட்டியலை கோரப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசியமற்ற வகையில் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைப்பதை தடுக்கும் வகையிலேயே இந்த மின்பட்டியல் கோரப்பட்டுள்ளதாகவும் லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது