புராதான சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மண்ணித்தலை பிள்ளையார் ஆலயத்தினை பாதுகாக்கும் பணிகள் நேற்று (04) ஆரம்பித்த வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் 4 மணி அளவில் இடம்பெற்றது.
தொல்பியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருமான அங்கயன் இராமநாதன், அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க, திணைக்கள பொது முகாமையாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி அபிவிருத்திக்குழு இணை தலைவரின் இணைப்பு செயலாளர், விரிவுரையாளரும், ஆகழ்வாராட்சியாளருமான புஸ்பரட்ணம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், ஆலயத்தின் மரபினை பாதுகாக்கும் வகையிலான வேலைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பிள்ளையார் ஆலயமானது 15 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியது எனவும், நீண்ட காலமாக மக்கள் வழிபாட்டுக்காக பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, அதன் கட்டுமான பணிகள் அனைத்தும் புராதன கட்டுமான முறைகள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் தொல்பியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொல்பியல் சின்னங்களை பாதுகாக்கம் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த ஆலயத்தின் தொல்பியல் சின்னங்களும் பாதுகாக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.