மட்டக்களப்பு புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட விகாரையின் பிரதம பிக்குவை எதிர்வரும் 22 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று (08) உத்தரவிட்டார்.
குறித்த விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்குவை கடந்த மாதம் (25) திகதி பொலிஸார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா காரணமாக அவரை நீதிமன்றில் அழைத்துவரப்படாத நிலையில் காணொளி மூலம் அவரை எதிர்வரும் 22 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்