போதைப்பொருள் விநியோகம் செய்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் இன்று (10) செவனகல பொலிஸாரால் செவனகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த போது கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் சுமார் 200 போதைப்பொருள் பொதிகள் இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடத்தல்காரரின் போதைப்பொருள்
பாணந்துறை பிங்வத்த பிரதேசத்தில் இருந்து சலிந்து என்ற கடத்தல்காரரின் போதைப்பொருள் பொதிகளை பெற்று அம்பலாங்கொடை, சூரியவெவ மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களுக்கு விநியோகிப்பதாக விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் பொதிகளை எம்பிலிபிட்டிய பகுதிக்கு விநியோகிக்க சென்ற போதே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான இந்த சந்தேக நபர்களில் ஒருவர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெலனிகம பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படை சோதனைச் சாவடியில் பணிபுரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதுடன் மாத்தறையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது