பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒருவனின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கிளிநொச்சி பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பெருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை (டிச 21) மாலை கிளிநொச்சி பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் 17க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.