தேசிய பாடசாலைகளுக்கான அனுமதி கடிதம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை விடுமுறைகள் நிறைவடைந்தவுடன், இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியேற்றதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.