பிலியந்தலை சுவாரபொல வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைகள் துணியால் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவருடன் சண்டை
27 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் சண்டையிட்ட அவர் தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெறவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.