பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பொலிஸாரின் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்த 125 வாகனங்களை வழங்கி இந்தியா உதவியுள்ளது.
இது தொடா்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும். இலங்கை பொது பாதுகாப்புத் துறை அமைச்சா் திரண் அலஸ்ஸிடம் பொலிஸாரின் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக 125 வாகனங்களை இந்தியா சாா்பாக தூதா் கோபால் பாக்ளே ஒப்படைத்தாா். உறுதி அளிக்கப்பட்ட 500 வாகனங்களில் மீதமுள்ள 375 வாகனங்களும் விரைவில் ஒப்படைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களைப் பெற்றுக் கொண்டு இலங்கை அமைச்சா் திரண் பேசுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளில் ரோந்து பணிகளுக்காகப் போதிய வாகன வசதியின்றி இலங்கை பொலிஸாா் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டனா். தக்க சமயத்தில் உதவிய இந்திய அரசுக்கு நன்றி’ என்றாா்.