ரி20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல் 53 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் சஹீன் சாஹ் அப்ரிடி இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய, பாகிஸ்தான் அணிக்கு 153 ஓட்டங்களை வெற்றி இலக்காக தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.