2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு
இந்தநிலையில், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் தேவைப்படும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகளை இப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 92,043 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதிக்காக 42,937 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

