லிபியா அருகே நேரிட்ட இரு படகு விபத்துகளில் 164 போ் பலியாகினா். இதுகுறித்து சா்வதேச புலம்பெயா்வோா் நல அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சஃபா சேலி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
லிபியா அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் கடந்த வாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. லிபியாவையொட்டிய கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த மரப் படகு கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 102 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். 3 நாள்கள் கழித்து, மற்றொரு படகு விபத்தில் பலியான 62 அகதிகளின் சடலங்களை லிபியா கடலோரக் காவல் படையினா் மீட்டனா்.
இதுதவிர, 210 அகதிகளுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு படகு இடைமறிக்கப்பட்டு, மீண்டும் லிபியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
கடந்த வாரம் உயிரிழந்தவா்களையும் சோ்த்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த ஆண்டு ஏற்பட்ட படகு விபத்துகளில் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை சுமாா் 1,500-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்