இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது.
குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கை
உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவிகளை பெறும் நோக்கிலும், அந்நிய செலாவணி இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, பணவீக்கம், கடனை மீள செலுத்துவதில் உள்ள நெருக்கடி உள்ளிட்ட காரணிகளாலுமே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அமைச்சரவைப் பத்திரத்தில் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அது தொடர்பில் உலக வங்கிக்கு தெரியப்படுத்தப்படும்.
அதேவேளை இலங்கையானது இதுவரையில் மத்திய வருமானம் பெறும் நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.