வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு வந்த தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் மூலம் அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாயும் மகளுக்கு ஐடிஎச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது தொடர்பிலான தகவ்ல்கள் எதுவும் வெளியாகவில்லை.