வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை நாட்டிற்கு இறக்குமதி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள கடையொன்றில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பழங்கள் விற்பனை செய்யும் போர்வையில் சிகரெட் விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 12,000 சிகரெட்டுகளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலபே மற்றும் கடவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.