நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளது.
இதனால் சில பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றனர்.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்திய துறையினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வைத்தாயசாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசாதாரண வரி அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 40 திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.