கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் காரின் பின்னால் இருக்கையில் அமர்ந்து சென்ற பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (10) காலை பம்பலப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர், காரின் சாரதி தப்பிச் சென்றதுடன், விபத்து இடம்பெற்ற போது காரின் பின்னால் இருக்கையில் அமர்ந்து சென்ற பெண் ஒருவரை மேலும் இரு பெண்கள் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸார் தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை மற்றும் எல்லக்கல பிரதேசத்தை சேர்ந்த துப்பரவு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் நாளை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் சாரதியை கைது செய்ய கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்