தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சட்ட வல்லுனர்களினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்டமூலத்திற்கு நேற்று (21) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார்