ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இந்திய ஊடகங்களில் இது தொடர்பான பாபா வங்காவின் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்ட பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டியான பாபா வங்கா ரஷ்யா தொடர்பிலும் கணித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி “ரஷ்யாவை தடுக்க முடியாது. அதாவது ரஷ்யா இந்த உலகிற்கே கடவுள் போன்ற நாடாக உருவெடுக்கும். ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பா ஒன்றுமே இல்லாத மோசமான வெற்று நிலப்பரப்பாக மாறும். உலகில் எல்லா நாடுகளுக்கும் பிரச்சினை வந்தாலும் ஒரு நாட்டை மட்டும் யாராலும் தொட முடியாது. அந்த நாடு ரஷ்யா. அது விளாடிமீருக்கு சொந்தமான ரஷ்யா. ரஷ்யாவை யாராலும் தடுக்க முடியாது. ரஷ்யாவை தடுக்க நினைக்கும் ரஷ்யாவின் பாதையில் இருக்கும் நாடுகள் எல்லாம் நீக்கப்படும். ரஷ்யா உலகிற்கே தலைமை ஏற்க போகிறது” என மோசமான விளைவை காட்டும் அதிர்ச்சி கணிப்பை பாபா வங்கா வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.
பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது.
இவருக்கு 13 வயதில் பார்வை பறிபோன நிலையில் இவரின் கண்களுக்குள் எதிர்கால சம்பவங்கள் அவ்வப்போது காட்சியாக தெரிந்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம்.
அதன்படி 5079ம் ஆண்டு வரையில் உலகம் தொடர்பிலான கணிப்புக்களை எழுதியுள்ள பாபா வங்கா அந்த ஆண்டில் உலகம் அழியும் எனவும் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இவரின் கணிப்புகளில் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றமை, தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் உடைந்தமை போன்ற விடயங்கள் தொடர்பில் இவர் துல்லியமாக கணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையா இல்லையா என்பது தொடர்பிலும் அவர் கணித்தவை நடக்குமா நடக்காதா என்பது குறித்தும் விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதேவேளை பாபா வங்கா கடந்த 1996ஆம் ஆண்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.