இலங்கையை சேர்ந்தவர்கள் என கருதப்படும் 44 பேருடன் படகொன்று பிரான் அண்மையில் உள்ள ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு சென்ற 44 பேரில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.
அதிகாரிகள் நடவடிக்கை
இந்நிலையில் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், ரீ யூனியன் தீவு பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் சட்டவிரோதமாக கனடா செல்ல முறைபட்ட 300 இற்கு அதிகமான இலங்கையர்கள் வியட்நாமில் சிக்கிகொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.