குழந்தையின் வாழ்க்கையை விட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு வாழ்க்கையாகும்.”
இதேவேளை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணரும், கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியருமான பூஜித விக்ரமசிங்க இது குறித்து கருத்து வெளியிடுகையில்;
“இங்கு நமது உடலின் சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுட்காலம் குறைகிறது. அந்த அணுக்களில் உள்ள குறைபாடு காரணமாகவே இது நிகழ்கிறது, மேலும் இந்த நிலை ஒரு மரபணு நோயாக அடையாளம் காணப்படுகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கு இரண்டு மரபணுக்கள் தேவைப்படுகின்றன. அதாவது, பெற்றோர் இருவரிடமிருந்தும் பாதிக்கப்பட்ட மரபணு குழந்தைக்கு கிடைக்க வேண்டும். அவ்வாறு நிகழும்போதுதான் தலசீமியா நோய் நிலைமை ஏற்படுகிறது. பொதுவாக இந்த நோய் உள்ள ஒரு குழந்தை, பிறந்த சில மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் நோய்க்கான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். குழந்தையின் செயல்பாடுகள் குறைதல், வளர்ச்சி மந்தமடைதல் போன்ற அறிகுறிகள் தென்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு நோயை அடையாளம் காண முடியும். தற்போது இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய முக்கிய முறை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஆகும். ஆனால் இது எளிதாகச் செய்யக்கூடிய ஒரு சிகிச்சை அல்ல என்பதுடன், ஒரு குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் மட்டுமே இது செய்யப்படுகிறது.”
இதேவேளை, அனுராதபுரம் தலசீமியா பிரிவின் இரத்தவியல் நிபுணர் வைத்தியர் சதுர்மா பியரத்னவும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்தார்
“தலசீமியா என்பது இரத்தத்துடன் தொடர்புடைய ஒரு மரபணு நோய் நிலைமையாகும். நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்கள் மூலமே உடலுக்குத் தேவையான ஒக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சிவப்பு இரத்த அணுக்களின் முக்கிய புரதமான ஹீமோகுளோபின் சரியான முறையில் அல்லது சரியான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில் சிக்கல் ஏற்படும் போது தலசீமியா நோய் ஏற்படுகிறது. இது இரத்தக் குறைவை, அதாவது இரத்த சோகையை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். ஆனால் இது ஒரு தொற்றுநோய் அல்ல. இரத்தம் மூலமாகவோ அல்லது தொடுதல் மூலமாகவோ மற்றொருவருக்குப் பரவாது. இது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலம் கடத்தப்படும் ஒரு நோயாகும்.
சில சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படாவிட்டாலும், அவர்கள் தலசீமியா மரபணுவைக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். அத்தகைய இருவர் திருமணம் செய்து குழந்தை பெறும்போது, அந்த குழந்தைக்கு ‘மேஜர் தலசீமியா’ நிலை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அதேபோல், சில குழந்தைகள் இந்த மரபணுவை சுமப்பவர்களாகப் பிறக்கிறார்கள், இன்னும் சில குழந்தைகள் முற்றிலும் ஆரோக்கியமாகப் பிறக்கிறார்கள்.”

