தற்போது பல துறைகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் சில நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதேவேளை எரிபொருள் விநியோகம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதனடிப்படையில், சாதாரண செயல்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரை 6,600 லீற்றர் கொள்ளளவை கொண்ட 300 இற்கும் மேற்பட்ட பெற்றோல், டீசல் பவுசர்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக CPC/CPSTL தலைவர் எம்.யு. மொஹமட் உறுதிப்படுத்தினார்.