தரம் குறைந்த டீசலினால் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் என்.எம்.கே. ஹரிஸ்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒரு லீற்றர் டீசலில் எட்டு கிலோ மீற்றர் வரையில் பயணம் செய்ய முடிந்த போதிலும் தற்பொழுது அதே அளவில் 4 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே பயணம் செய்ய முடிகின்றது என தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த டீசல் காரணமாக அநேகமான பாடசாலை பஸ் மற்றும் வான்கள் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை போக்குவரத்து செய்யும் பஸ், வான் சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களை போக்குவரத்து செய்யும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
நாடு முழுவதிலும் சுமார் 40000 பாடசாலை பஸ் மற்றும் வான்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது 10000 வாகனங்களே சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ஹரிஸ்சந்திர பத்மசிறி தெற்கு ஊடகமொன்று நேர்காணல் வழங்கியுள்ளார்.