தமிழக முகாமிலிருந்து கனடா தப்ப முயன்ற இலங்கை அகதிகள் மாலைதீவில் பிடிபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் அகதி முகாமிலிருந்து கனடாவிற்கு கடல் வழியாக தப்ப முயன்ற சமயத்தில் மாலைதீவில் அகப்பட்ட ஈழ அகதிகள் 60 நபர்களின் பெயரினை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இவர்கள் தமிழக அகதிகள் முகாமிலிருந்து தப்பியுள்ளனர். இந்த நிலையில் நீண்டநாள் மீன்பிடி விசைப்படகு மூலம் கனடாவிற்கு பயணித்தபோது.
இயந்திரக் கோளாறு காரணமாக மாலைதீவை அண்டியுள்ள அமெரிக்கப்படை நிலையத்தில் இவர்கள் பிடிபட்டு அங்கே அடைக்கப்பட்டார்கள். அதன் பின் அவர்களை அமெரிக்கா மாலைத்தீவு அரசிடம் ஒப்படைத்தது. இந்த நிலையில் தற்போது பிடிபட்ட அகதியின் பெயர்களை மாலைத்தீவு அரசானது வெளியிட்டுள்ளது