சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
தற்போது அவுன்ஸூக்கு 5.80 டொலர்கள் அதிகரித்து, 1941.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
மேலும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையிலும் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது.
அதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 110,500 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 101,300 ரூபாவாகவும், 21 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 96,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.