சூடானில் உள்ள தங்க சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் மேற்குப் பகுதியில் தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், மூடப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் சென்று சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விபத்தில் சிக்கியது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 38 பேரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.