செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் புதிய வழிமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அநுருத்த, வாகனங்கள் புதுப்பிக்கும் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.