சிகிரியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் திட்டி தாக்கியதாக சிகிரிய சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பல்கலைக்கழக மாணவனை தாக்கிய வேளை அதனைத் தவிர்க்க முற்பட்ட போது அவர் தரையில் வீழ்ந்து இரண்டு விரல்களில் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
சுற்றுலாவுக்கு வந்த மாணவன் தனது கையடக்கத் தொலைபேசியில் சிகிரிய அப்சரஸ்களின் புகைப்படங்களைப் படம் பிடிக்கச் சென்ற போதே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து சீகிரியாவுக்கு விஜயம் செய்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.