சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்ட பேரணியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இதன்போது பொலிசார் போராட்டக்காரர்களை அடக்க முயன்ற நிலையில் இவ்வாறன நிலை ஏற்பட்டது
குறித்த எதிர்ப்பு வலுப்பெறாமல் இருக்க பொலிசார் தீவிரமாக முயற்சித்தனர். இதன் போது முரண்பாடு ஏற்பட்டது.
ஆனாலும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் அமைதியாக பேரணியினர் கடந்து சென்றனர்.
குறித்த போராட்ட பேரணி தற்போது கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

