நீண்ட வார இறுதி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு (04)சிவனடி பாதமலையை தரிசனம் செய்வதற்காக ஹட்டன் வீதியூடாக பெருமளவான யாத்திரிகர்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் வீதியூடாக அதிகளவான யாத்திரிகர்கள் ஸ்ரீ பாதவை தரிசனம் செய்ய வருகை தந்துள்ளதாகவும், பக்தர்கள் பயணித்த வாகனங்கள் நல்லதண்ணி- மஸ்கெலியா பிரதான வீதியின் இருபுறங்களிலும் சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் வரை நிறுத்தப்பட்டிருந்ததாகவும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்று 4ஆம் திகதியும் சிவனடி பாதமலையைத் தரிசனம் செய்வதற்காக பெருமளவான யாத்திரிகர்கள் ரயில்களில் வருகை தந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.