சிறைச்சாலைக் கைதிக்குக் கொண்டுவரப்பட்ட உணவுப் பொதிக்குள் இருந்து 4 பைக்கற் போதைப்பொருட்கள் சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் காலி சிறைச்சாலையில் இன்று இடம்பெற்றுள்ளது.
கைதி ஒருவருக்கு, அவரின் உறவினர் ஒருவரால் சிறைக்கு சோறு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோது, உணவு பொதிக்குள் 4 பைக்கற் போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் போதைப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இதனையடுத்து போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டுள்ள துடன், சிறைச்சாலை அதிகாரிகளும், பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.