சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக, பெண்கள் அனுஷ்டிக்க வேண்டும் என உள்ளுராட்சிமன்ற பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை, கோறளைப்பற்று பிரதேசசபையின் காந்திபூங்காவில் உள்ளுராட்சிமன்ற பெண்கள் சிலர் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் எரிவாயு கொள்கலன்களை வைத்துக்கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாகவும் பெற்றோல், டீசல் தட்டுப்பாடுகள் காரணமாகவும். பெண்கள் பெரும் சிரமங்களையும், கஸ்டங்களையும். எதிர்நோக்கிவருவதாகவும், இதன் காரணமாக குடும்ப வன்முறைகளும், அதிகரித்துவருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டனர்.
“விலையினையேற்றி வன்முறையினை தூண்டாதே”,“விலைவாசியால் திண்டாடும் பெண்கள், அரசே பெண்களின் நிலைக்கு பதில் சொல்.” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள் எதிர்நோக்கும் நெருக்கடியை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து பெண்களும் இந்த மகளிர் தினத்தினை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு” இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.