சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக சுமார் 03 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதியின் கீழ் 48 மாத வேலைத்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரகாரம், இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று அல்லது நாளை (23) வெளியிடப்படும்.
அதன் கீழ் 333 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ளது.