நைஜீரியாவில் நடைபெற்ற Bayelsa International Film Festival விருது வழங்கும் விழாவில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நிரஞ்சனி சண்முகராஜா சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார்.
86 நாடுகள் மற்றும் 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுடன் போட்டயிட்டு “Bayelsa சர்வதேச திரைப்பட விழாவில்” இலங்கை திரைப்படமான ‘சுனாமி’ இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.
சுனாமி படத்துக்கான சிறந்த நடிகைக்கான விருதினை நிரஞ்சனி சண்முகராஜாவும், சிறந்த இயக்குனர் விருதினை சோமரத்ன திஸாநாயக்கவும், பெற்றுள்ளனர்.
இதேவேளை நிரஞ்சனி சண்முகராஜா இலங்கை திருநாட்டின் வனப்பு மிகு பிரதேசமான மலையகத்தின் கண்டியை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் சர்வதேச விருது வென்று நாட்டுக்கு பெருமையை தேடித்தந்த நடிகை நிரஞ்சனிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.