மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அளவில் கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதித்து வருகின்றனர்.
குலேந்திரன் கோபீந்திரன் என்ற இளைஞனே 2019 ஆம் ஆண்டு மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும்போது huex எனும் மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து சர்வதேச அளவில் பல சேவைகளை வழங்கி வருகின்றார்.
30 இற்கு மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, பலருக்கு பயிற்சி அளித்து வழிகாட்டியும் வருகிறார்.
கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் இடம்பெற்ற உலகளாவிய மாணவர் தொழில்முனைவோர் விருதுகளின் (GSEA) தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று, அரையிறுதியிற்கு தேர்வாகியிருந்தார்.
இதனடிப்படையில், கடந்த 19 ஆம் திகதி huex, EO இலங்கை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பூனே, இந்தியாவில் (Pune, India) நடைபெற்ற உலகளாவிய மாணவர் தொழில்முனைவோர் விருதுகளின் (GSEA) காலிறுதி போட்டியில் பங்குபற்றியிருந்தார்.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் போட்டியிட்டு, முதல் 3 பங்கேற்பாளர்களில் இடம்பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.