பதுளை, கனல்பின்வத்த, ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் அவரது மகளையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணும் அவரது 2 மகள்களும் பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடு ஒன்றில் வசித்து வந்ததாகவும், அவர்கள் இன்று (10) காலை தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 83 வயதான தாயும் 55 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
அத்துடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 62 வயதுடைய மகள் ஆபத்தான நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.