ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் மையப்படுத்தி லங்கா சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கத்தை தடுக்க புதிய வலையமைப்பை அமைக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதும், தரமான இறக்குமதி மற்றும் உள்ளூர் பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பை 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கும் வகையில் 1000 ஆக விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.